2019 வரை மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைப்பு

2019 வரை கிழக்கு, வடமத்திய, ஊவா ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒத்திவைக்கப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

மேற்படி மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் 2012 ஆண்டு செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெற்றது. அவற்றின் முதல் அமர்வு ஒக்டோபர் மாதத்திலேயே கூட்டப்பட்டது. இதன்படி அவற்றின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவுக்கு வருகின்றது.

தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கமுடியாது. எனவேதான், மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து தேர்தலை அரசு ஒத்திவைக்கவுள்ளது.

மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதை அங்கீகரித்துக்கொள்வதற்காக அது விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]