2019 உலகக்கிண்ணத்துடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை : டு பிளிசிஸ்

2019 உலகக்கிண்ணத்துடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுக்கவுள்ளதாக டு பிளிசிஸ் கூறியுள்ளார்.
தென்ஆப்பிரிக்க டெஸ்ட் மற்றும் ரி20 கிரிக்கெட் அணியின் தலைவர் இருப்பவர் டு பிளிசிஸ்.

முன்னணி துடுப்பாட்ட பணியுடன், பீல்டிங்கிலும் சிறந்து விளங்கக்கூடியவர். 32 வயதாகும் இவர் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கிண்ணத் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில்,

நான் உள்பட மூத்த வீரர்கள் 2019ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ணத் தொடருடன் விடைபெற வாய்ப்புள்ளது. அதுவரை அனைத்து வகை கிரிக்கெட் தொடரிலும் நான் விளையாடுவேன். அதன்பின் எனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து அறிவிப்பேன்” என்றார்.

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஏபி டி வில்லியர்ஸ் முதுகுவலி காரணமாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் இருக்கிறார். 2019 உலகக்கிண்ணத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார். உலகக்கிண்ணத் தொடருக்குப்பின் அவர் ஓய்வுபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் டு பிளிசிஸ் யாருடைய பெயரையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

சர்வதேச தின நிழ்வுகளில் கலந்துகொள்ள
நேபாள பிரதமர் இலங்கை விஜயம்

சர்வதேச வெசாக தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இலங்கை அரசின் அழைப்பின் பேரில் நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி நேற்று இலங்கை வந்தடைந்தார்.

ஐக்கிய நாடுகளின் 14ஆவது சர்வதேச வெசாக் தினம் இம்முறை இல்கையில் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வின் ஆரம்பித்துவைப்பதற்காக இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று இடம்பெறவுள்ள இறுதி தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக நேபாள ஜனாதிபதி இலங்கைக்கு வந்துள்ளார்.

இவருக்கான வரவேற்பை புத்தசான மற்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ வழங்கியிருந்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]