2019 ஆஷஸ்

2019 ஆஷஸ் இங்கிலாந்தில், 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஆஷஸ் தொடரின்போது பகல் – இரவு டெஸ்ட் இருக்காது என்றவாறான கருத்துகளை இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி டொம் ஹரிஸன் வெளிப்ப்படுத்தியுள்ளார்.

பகல் – இரவு டெஸ்ட் போட்டிகளைப் பார்வையிடுவதற்கு மைதானத்துக்கு அதிகளவிலான இரசிகர்கள் செல்வதுடன், தொலைக்காட்சியிலும் குறித்த நேரத்தில் அதிகளவான பார்வையாளர்கள் பார்வையிடுகின்ற நிலையிலேயே டொம் ஹரிஸனின் மேற்குறித்த கருத்து வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட்டில் பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக இம்முறை நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆஷஸின் டெஸ்ட் போட்டியொன்று பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்ற முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்திருந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]