2019ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணமே எனது கடைசி போட்டியாக இருக்கும்: லசித் மலிங்க

2019ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணமே எனது கடைசி போட்டியாக இருக்கும்: லசித் மலிங்க

2019ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணமே எனது கடைசி உலக கிண்ணமாக இருக்கும் என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘2019 உலககிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தால் நான் விளையாடுவேன். அதுவே எனது இறுதி உலக கிண்ணமாகயிருக்கும்.

எனினும் கடந்த சில வருடங்களில் எனக்கு நடந்த விடயங்களை பார்க்கும்போது எனக்கு உலககிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.

நான் சாதாரண வீரர் மாத்திரமே, வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவது மாத்திரமே எனது வேலை. எனினும் வாய்ப்பு கிடைத்தால் அதனை நான் நன்றாக பயன்படுத்துவேன். தெரிவுக்குழுவினரே அந்த முடிவுகளை எடுக்கவேண்டும்.

நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் உள்ளேன் என்பதால் சிறப்பாக செயற்படுபடுவேன்’ என தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]