2018 ஐபோன் மாடல்கள் அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்

2018 ஐபோன் மாடல்கள் அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 ஐபோன் மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR என அழைக்கப்படும் மூன்று மாடல்களில் பல்வேறு புதிய அம்சங்களுடன், ஆப்பிள் சாதனங்களில் முதல் முறை அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் 458PPI சூப்பர் ரெட்டினா HDR டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது.
2018 ஐபோன் மாடல்கள்
இந்த டிஸ்ப்ளே டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். 19 மற்றும் 120Hz டச்-சென்சிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் புதிய ஐபோன்களில் முதல் முறையாக டூயல் சிம் சப்போர்ட் வசதி டூயல் ஸ்டான்ட்-பை இசிம் மூலம் வழங்கப்படுகிறது. எனினும் சீனாவில் மட்டும் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படுகிறது.
புதிய ஐபோன் ஆப்பிள் ஏ12 பயோனிக் 7என்.எம். சிப்செட் மூலம் இயங்குகிறது. இது முந்தைய ஏ11 பிராசஸரை விட 15% வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6-கோர் சி.பி.யு. கொண்ட புதிய சிப்செட் 40% குறைந்த மின்சக்தியை பயன்படுத்துகிறது. இதனால் ஐபோனின் பேட்டரி பேக்கப் முந்தைய மாடல்களை விட அதிக நேரம் கிடைக்கும்.
புதிய ஐபோன் XS மாடலில் உள்ள ஃபேஸ் ஐடி அம்சம் முந்தைய தொழில்நுட்பத்தை விட வேகமாகவும், அதிக பாதுகாப்பாகவும் இருக்கிறது.
2018 ஐபோன் மாடல்கள்
ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் சிறப்பம்சங்கள்
*ஐபோன் XS: 5.8-இன்ச் 2436×1125 பிக்சல் OLED 458ppi சூப்பர் ரெட்டினா HDR டிஸ்ப்ளே, 3D டச்
*ஐபோன் XS மேக்ஸ்: 6.5-இன்ச் 2688×1245 பிக்சல் OLED 458ppi சூப்பர் Retina HDR டிஸ்ப்ளே, 3D டச்
*6-கோர், ஏ12 பயோனிக் 64-பிட் 7என்.எம். பிராசஸர் 4-கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர்
*64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
*ஐ.ஓ.எஸ். 12
*வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
*டூயல் சிம் (இரண்டாவது இசிம் தேர்வு செய்யப்பட்ட நெட்வொர்க் மட்டும் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்)
*12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8
*12 எம்பி டெலிஃபோட்டோ இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, டூயல் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்
*7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
*ட்ரூ டெப்த் கேமரா
*4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்
*பில்ட்-இன் லித்தியம் அயன் பேட்டரி, க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
*ஃபாஸ்ட் சார்ஜிங்
ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன் கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ஐபோன் XS விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.71,813) முதல் துவங்குகிறது. ஐபோன் XS மேக்ஸ் விலை 1,099 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.79,001) முதல் துவங்குகிறது.
ஐபோன் XS சீரிஸ் முதற்கட்டமாக 30 நாடுகளில் கிடைக்கும். இவற்றுக்கான முன்பதிவு செப்டம்பர் 14-ம் தேதி துவங்கி, விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ.99,990 மற்றும் ரூ.1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் XR சிறப்பம்சங்கள்:
* 6.1 இன்ச் 1792×828  பிக்சல் எல்.சி.டி. 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, 3D டச்
*6-கோர் ஏ12 பயோனிக் 64 பிட் 7 என்.எம். பிராசஸர், 4-கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர்
*64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
* ஐ.ஓ.எஸ். 12
*வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
*டூயல் சிம் (நானோ+இரண்டாவது இசிம் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்)
*12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8, ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ட்ரூ டோன் ஃபிளாஷ்
*7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
* ட்ரூ டெப்த் கேமரா
*4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்
*பில்ட்-இன் லித்தியம் அயன் பேட்டரி, க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
*ஃபாஸ்ட் சார்ஜிங்
ஆப்பிள் ஐபோன் XR மாடல் வைட், பிளாக், புளு, எல்லோ, கோரல் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]