2018 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்ற வெற்றியாளர்கள்……

90வது ஆஸ்கார் விருதுகள், கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது.

சினிமாத் துறையின் மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுவது ஆஸ்கார் விருது. ஆஸ்கார் விருது என்பது ஒவ்வொரு சினிமா கலைஞனுக்கும் ஒரு கனவாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களை அடையாளம் கண்டு அதற்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 90வது ஆஸ்கார் விருது ஹாலிவுட் கலிபோர்னியாவில் இன்று நடைபெற்றது. இதில் ‘தி ஷேப் ஆப் வாட்டர்’, ‘ட்ன்கிர்க்’ மற்றும் ‘தி டார்கெஸ்ட் ஹவர்’ உள்ளிட்ட படங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.

இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர்களின் பட்டியல் இதோ:

சிறந்த படம்: ‘தி ஷேப் ஆப் வாட்டர்’

சிறந்த நடிகை : பிரான்சிஸ் மெக்டார்மென்ட் (த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைடு எப்பிங், மிசோரி)

சிறந்த நடிகர் : கேரி ஓல்ட்மேன் (தி டார்கெஸ்ட் ஹவர்)

சிறந்த இயக்குநர்: கல்லிர்மோ டெல் டோரோ (தி ஷேப் ஆப் வாட்டர்)

சிறந்த பாடல் – ரிமெம்பர் மீ (கோகோ)

சிறந்த இசை – அலெக்சாண்ட்ரே டெஸ்பிளாட் (தி ஷேப் ஆப் வாட்டர்)

​ சிறந்த ஒளிப்பதிவு: ரோஜர் ஏ. டீகின்ஸ் (பிளேட் ரன்னர் 2049)

சிறந்த திரைக்கதை- ஜார்டன் பீலே (கெட் அவுட்)

சிறந்த திரைக்கதை தழுவல் – ஜேம்ஸ் ஐவரி (கால் மீ பை யுவர் நேம்)

சிறந்த குறும்படம்: தி சைலன்ட் சைல்ட்

சிறந்த குறும்படம்: தி சைலன்ட் சைல்ட்

சிறந்த ஆவணக் குறும்படம்: ஹெவன் ஈஸ் எ டிராபிக் ஜாம் ஆன் தி 405

சிறந்த நடிகர்: சேம் ராக்வெல், “த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைடு எப்பிங், மிசோரி”

சிறந்த துணை நடிகை: அளிஷன் ஜேனி, “ஐ, டோன்யா”

சிறந்த வெளிநாட்டுப் படம்: “எ பென்டாஸ்டிக் உமன்”

சிறந்த அனிமேஷன் படம்: “கோகோ”

சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்: “பிளேட் ரன்னர் 2049”

சிறந்த படத்தொகுப்பு: “டன்கிர்க்”

சிறந்த அனிமேஷன் குறும்படம்: “டியர் பாஸ்கெட்பால்”

சிறந்த புரொடக்ஷன் டிசைன்: “தி ஷேப் ஆப் வாட்டர்”

சிறந்த ஆடை வடிவமைப்பு: “பேண்டம் திரெட்”

சிறந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலிங்: “டார்க்கேஸ்ட் ஹவர்”

சிறந்த ஆவணப்படம்: “இகாரஸ்”

சிறந்த சவுண்ட் எடிட்டிங்: “டங்கிர்க்”

சிறந்த சவுண்ட் மிக்ஸிங்: “டங்கிர்க்”

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]