2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த பிரியங்கா சோப்ராவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார் நடிகை தீபிகா படுகோன். முன்னாள் கனவுக்கன்னி ஐஸ்வர்யா ராய் பரிதாபமாக முப்பதாவது இடத்தில் இருக்கிறார்.
இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் ‘ஈஸ்டர்ன் ஐ’ வார இதழ் 50 கவர்ச்சியான ஆசியப் பெண்கள் பட்டியலை வருடந்தோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு நேற்று வெளியிடப்பட்டுள்ள இந்தப்பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தீபிகா படுகோனே நடித்த ’பாஜிராவ் மஸ்தானி’, ’பத்மாவத்’ ஆகிய திரைப்படங்கள் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றி மட்டுமல்லாது, உலக அளவில் வரவேற்பை பெற்றது. அதுவே தீபிகா படுகோனே முதலிடம் பெற்றதற்கான காரணம்.
இந்த தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த நசீர் இது குறித்து பேசியபோது, ”அவரது செயல்பாடுகள் மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், மன ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. அதுபற்றி அவர் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். தீபிகா படுகோனேவின் இத்தகைய இயல்பு மற்றவர்களின் மனதிற்குள் கவர்ச்சியை ஏற்படுத்துகிறது” என்றார்.
கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த பிரியங்கா சோப்ரா இரண்டாவது இடத்தில் இருக்க, கவர்ச்சியான பெண்கள் பட்டியலில் ஹிந்தி சீரியல் நடிகை நியா ஷர்மா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை மஹிரா கான் நான்காம் இடத்தையும், இந்தியாவைச் சேர்ந்த ஹிந்தி சீரியல் நடிகை சிவாங்கி ஜோஷி ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர். உலக அழகி ஐஸ்வர்யா ராய் முப்பதாவது இடத்தில் இருக்கிறார்.
செக்ஸியான பெண்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய இருவருமே சமீபத்தில்தான் திருமணம் செய்துகொண்ட ஆண்ட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]