2017ஆம் ஆண்டு க.பொ.சாதாரண தர பரீட்சை மாணவர்களின் முக்கிய கவனத்திற்கு…

2017ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய (27) தினம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகிருந்த நிலையில் இன்று (28) வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு இணையத்தளத்தில் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கடந்த டிசெம்பர் மாதம் இடம்பெற்ற 2017 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையில் ஆறு இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.

இந்நிலையில் பரீட்சைக்கு தோற்றியிருந்த 969 பேருக்கு பெறுபேறுகள் வெளியிடப்படாது என கல்வி அமைச்சு அண்மையில் அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]