2016ம் ஆண்டு மூன்றாம் காலாண்டுக்கான வேலையற்றோர் தொகைமதிப்பு 4.5 சதவீதம்

2016ம் ஆண்டு மூன்றாம் காலாண்டுக்கான மதிப்பிடப்பட்ட வேலையற்றோர் சதவீதம் 4.5 என தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.ஜே. சதரசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளதாவது.

இலங்கைத் தொழிற்பல அளவீடானது இலங்கையின் வேலை செய்வோர், வேலையற்றோர் மற்றும் தொழிற்பலத்தின் மட்டங்கள், போக்குகளை அளவிடும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ் அளவீடு 1990 முதலாம் காலாண்டிலிருந்து காலாண்டு ரீதியாக மேற்கொள்ளப்படுகிறது.

வேலையற்றோர்

தொழிற்பல அளவீடு – 2016ம் ஆண்டானது அளவீட்டுத் தொடரின் 36 வது ஆண்டாகும். தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களமானது, தொழிற்பல அளவீடு – 2016 இன் 4வது காலாண்டை 6440 வீட்டுக் கூறுகளின் மாதிரி அடிப்படையில் வெளியிட்டுள்ளது. நாலாம் காலாண்டு அளவீட்டுக்கான கள வேலைகள், நாடளாவிய ரீதியில் 2016 இன் ஜூலை, ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கைக்கான தொழில் புரியும் வயது 15 ம் அதற்கு மேலும் என வரையறுக்கப்பட்டுள்ளது. குறித்த வாரப் பகுதியில் தொழில் புரியும் அல்லது தொழிற்றவர்களான மொத்த தொழில் புரியும் வயதையுடைய சனத்தொகையினர், பொருளாதார ரீதியில் செயல்திறன் மிக்க சனத்தொகை என இனங் காணப்பட்டுள்ளனர். மதிப்பிடப்பட்ட பொருளாதார ரீதியில் செயல்திறன் மிக்க சனத்தொகை, 2016 நாலாம் காலாண்டில் 63.5 சதவீதம் ஆண்களையும் 36.5 சதவீதம் பெண்களையும் உள்ளடக்கியவாறு ஏறத்தாழ 8.4 மில்லியனாகும்.

தொழிற்பலம் என்பது, தொழில் புரியும் வயதையுடைய தற்போது பொருளாதார ரீதியில் செயல்திறன் மிக்க சனத்தொகை என வரையறுக்கப்பட்டுள்ளது. தொழில் புரியும் வயதையுடைய (15 வயதும் அதற்கு மேலும்) சனத்தொகையின் சதவீதமாக வெளிப்படுத்தப்படும் தொழிற்பல சனத்தொகையினர், தொழிற்பல பங்களிப்பு வீதமாகும். மூன்றாம் காலாண்டுக்கான முழுமொத்த தொழிற்பல பங்களிப்பு வீதம் 53.8 சதவீதமெனவும் அதில் 75.0 சதவீதம் ஆண்கள் எனவும் 36.1 சதவீதம் பெண்கள் எனவும் அளவீட்டுப் பெறுபேறுகள் வெளிப்படுத்துகின்றன.

குறித்த காலப் பகுதியில் ஆகக் குறைந்தது ஒரு மணித்தியாலமாவது சம்பளம் பெறும் பணியாளர்களாக, பணி கொள்வோராக, சுய தொழில் புரிவோராக அல்லது குடும்ப வேலையாட்களாகப் பணி புரியும் நபர்கள் அனைவரும் தொழில் புரிவோராகக் கொள்ளப்படுவர். இக் காலாண்டுக்கான மதிப்பிடப்பட்ட தொழில் புரியும் சனத்தொகை ஏறத்தாழ 8.0 மில்லியன் ஆகும். இதில் சேவைத்; துறையில் ஈடுபடுவோர் ஏறத்தாழ 46.1 சதவீதமும் விவசாயத்துறையில் 27.1 சதவீதமும் கைத்தொழில் துறையில் 25.3 சதவீதமும் உள்ளனர். அதிகூடிய வேலை வாய்ப்புப் பங்களிப்பை சேவைத் துறை கொண்டுள்ளதுடன் இப்போக்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே விதமானதாகும். மேலும் தொழில் புரியும் சனத்தொகையில் ஏறத்தாழ 68.0 சதவீதத்தினர் வாரம் ஒன்றில் 40 மணிக்கும் மேலாகப் பணியாற்றுகின்றனர் எனவும் அளவீடு வெளிப்படுத்துகிறது.

குறித்த காலப் பகுதியில் வேலை செய்யாதோரும், வேலை தேடிக் கொண்டிருப்போரும், கடந்த நான்கு வாரங்களில் வேலை தேட நடவடிக்கை எடுத்துள்ளோரும் மற்றும் எதிர்வரும் இரு வாரங்களில் வேலை வாய்ப்பைப் பெற்றால் புரியத் தயாராயிருப்போரும் வேலையற்றோர் எனக் கொள்ளப்படுவர். மொத்த தொழிற்பலத்தில் வேலையற்ற சனத்தொகையின் விகிதாசாரம் வேலையற்றோர் சதவீதமாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]