20 நாடுகளின் தூதுவர்களுடன் ரணில் அலரிமாளிகையில் திடீர் சந்திப்பு

ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து விளக்கமளித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, ஜப்பான், கனடா, உள்ளிட்ட 20 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க மற்றும் சாலக ரத்நாயக்க ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.

20 நாடுகளின் தூதுவர்களுடன் 20 நாடுகளின் தூதுவர்களுடன் 20 நாடுகளின் தூதுவர்களுடன் 20 நாடுகளின் தூதுவர்களுடன்

 

இதன் போது அரசியலமைப்பு ரீதியாக தானே பிரதமராக இருப்பதாக, ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் தமக்கு இருப்பதாகவும், அதனால் தான் தாம் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரியிடம் திரும்பத் திரும்ப கேட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தச் சந்திப்பில் சீனத் தூதுவர் சென் ஷிய யுவான் பங்கேற்கவில்லை என்பதும், அவர் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]