20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் தடை

20 ஆவது திருத்தத்தை20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் தடைகள் காணப்படுவதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.

மலையக மக்கள் முன்னணியின்  இளைஞர்  மாநாடு கொட்டக்கலை விநாயகர் ஆலய மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

இலங்கையில் மூன்று பிரதான இனங்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரது உரிமைகளும் சமமான முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.

இனவாதத்தினால் இனவாதத்தை தோற்கடிக்க முடியாது. தேசிய ஒற்றுமையின் மூலம் மட்டுமே இனவாதத்தை தோற்கடிக்க முடியும்.

புதிய அரசியல் அமைப்பு நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான அறிக்கை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அனைத்து மக்களது உரிமையும் பாதுகாக்கப்படும் அம்சங்கள் இந்த அரசியல் அமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி முறை நீக்குதல், புதிய தேர்தல் முறை என்பன உள்வாங்கப்பட வேண்டும்.

இவ்விடயங்கள் உள்வாங்கப்பட்ட அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட்டால் அது நிறைவேற்றப்படுவது கடினமான விடயமாகும்.

இதற்கு வடக்கில் இருந்தும் தெற்கில் இருந்தும் பாரிய எதிர்ப்புக்கள் ஏற்படும். எனினும் அத்தகை உறுதியான அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்படும்பட்சத்தில் அதனை நிறைவேற்றுவதற்கு ஜேவிபி முழு அர்ப்பணிப்புடன் செயற்படும் என அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த கால அரசியல் தலைவர்கள் மலையக மக்களுக்கு உரிய போராட்ட வழிக்காட்டலை செய்திருந்தால் இன்றைய அரசியல் தலைவர்கள் பிரதேச சபைகளுக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அமீர் அலி இதனை தெரிவித்துள்ளார். அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் வியாழேந்திரன், இலங்கையின் கிழக்கு மற்றும் மலையக மக்கள் சர்வதேசத்திற்கு அடையாளப்படுத்தப்படாமைக்கு அரசியல்வாதிகளும் ஒரு காரணம் என தெரிவித்துள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]