20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு மத்திய மாகாண சபை அங்கீகாரம்

20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு மத்திய மாகாண சபை அங்கீகாரம்

20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு மத்திய மாகாண சபை திருத்தங்களுடன் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த திருத்தச் சட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது.

இதன்போது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 40 வாக்குகளும், எதிராக 9 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதேவேளை, இரண்டு பேர் நடுநிலைவகித்துள்ளனர்.

இந்த நிலையில், 31 மேலதிக வாக்குகளால் 20 ஆவது திருத்தச் சட்டம் மத்திய மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த திருத்தச் சட்டமானது, மேல், சப்ரகமுவ, வடமேல், கிழக்கு, வடத்திய மாகாணங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், ஊவா மற்றும் தென் மாகாணங்களில் தோல்வியடைந்துள்ளது.

இதேவேளை, வட மாகாண சபையில் அது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட வில்லை.

இந்த நிலையில், 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான உயர்நீதிமன்றித்தின் வியாக்கியானம் சபாநாயகர் கரு ஜயசூரியவால் இன்று அறிவிக்கப்படவுள்ளது

.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]