20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை என நாமல் அதிரடி பேச்சு

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நாம் ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஜே. வி. பியின் தனிப்பட்ட விருப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கொண்டுவரப்படும் இந்த 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் பயனுள்ளதாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டால், அதற்கு ஆதரவளிக்க நாம் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

bsite – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]