20வது திருத்தச் சட்ட மூலத்தை வட மாகாண சபை நிராகரித்தது

20வது திருத்தச் சட்ட மூலத்தை வட மாகாண சபை நேற்று வியாழக்
கிழமை முற்றாக நிராகரித்துள்ளது.வட மாகாண சபை

மாகாண சபைகளுக்கு பாதகமானது என கடுமையாக விமர்சிக்கப்பட்ட 20வது திருத்தச் சட்டத்தை நிராகரிக்கவேண்டும் என பெரும்பான்மை உறுப்பினர்கள் கூறியிருந்த கருத்துக்களுக்கு அமைய மேற்படி 20 வது திருத்தச் சட்டத்தை இப்போதுள்ள நிலையில் நிராகரிப்பது எனவும், இப்போதுள்ளதை விட சாதகமான முறையில் திருத்தங்கள் செய்யப்பட்டால் பின்னர் அதுபற்றி ஆராயலாமெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 105 வது அமர்வு நேற்று வியாழக்கிழமை வடமாகாண சபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 04 ஆம் திகதி 20 வது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் மாகாண சபையில் நடைபெற்றிருந்தது. இதன்போது பெரும்பான்மையான உறுப்பினர்கள் மேற்படி திருத்தச் சட்டத்தை எதிர்க்கவேண்டும் என கூறியிருந்தனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]