20ம் திகதி வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை!!

தமிழ் – சிங்கள புத்தாண்டு இம்முறை ஏப்ரல் மாதம் 14ம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்பட்டமையினால் எதிர்வரும் 20ம் திகதி வெள்ளிக் கிழமை, அரை நாள் வங்கி விடுமுறையாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன் காரணமாக 2018 ஏப்ரல் 20ம் திகதி வெள்ளிக் கிழமை கொழும்பு பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கலும் மதியம் 12.00 மணிக்கு நிறைவுக்கு வரும் என, இது குறித்து கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான ஒழுங்குமுறை அதிகாரி தரகு நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.

குறித்த அரை நாள் விடுமுறை வங்கிகளுக்கு மாத்திரம் என்றும் வேறு எந்தவொரு அரச நிறுவனங்களுக்கோ அல்லது வியாபார நிலையங்களுக்கோ பொதுவான விடுமுறை அல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது.