20ஆம் திகதிக்கு முன்னர் வேட்பாளர்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து வேட்பாளர்களும் தமது வருமானங்கள் மற்றும் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்கள் அனைத்தும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த உத்தரவை மீறி நடத்திச் செல்லப்படுகின்ற காரியாலயங்கள் மற்றும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், பதாதைகள் அனைத்தையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.