2.O திரைப்படத்தின் 4வது மேக்கிங் வீடியோ வெளியானது! வீடியோ உள்ளே…

2.O திரைப்படத்தின் 4வது மேக்கிங் வீடியோ வெளியானது! வீடியோ உள்ளே…

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் ‘2.O.’

கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவரவுள்ள இப்படத்தில், ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக ஹிந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி வெளியிட இருப்பதாக  இயக்குனர் சங்கர் அறிவித்தார்.

தற்போது இப்படத்தின் 4வது மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், இதுவும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

எனவே ‘2.O.’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]