‘ 2.0 ‘ படத்திலிருந்து பிரபல நிறுவனம் திடீர் நீக்கம்

         ‘ 2.0 ‘ படத்திலிருந்து பிரபல நிறுவனம் திடீர் நீக்கம்

2.0

ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் ‘2.0’ திரைப்படம் ஜனவரி 25ஆம் திகதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் இந்த படம் ஏப்ரலுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த தாமதத்திற்கு காரணமாக VFX நிறுவனம் திடீரென படத்தில் இருந்து விலக்கப்பட்டு அதற்கு பதிலாக இன்னொரு பிரபல நிறுவனத்திடம் கிராபிக்ஸ் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட நேரத்தில் கிராபிக்ஸ் பணியை முடித்து தராத ஹொலிவுட் VFX நிறுவனம் மீது லைகா நிறுவனம் வழக்கு போட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

புதிய நிறுவனமாவது சொன்ன திகதிக்குள் பணியை முடித்து கொடுத்து ஏப்ரல் வெளியீட்டுக்கு ஒத்துழைக்குமா? என்பதே மில்லி ன் டொலர் கேள்வி?

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]