2 .0 படத்தின் டிரைலர் வெளியீடு விழா நேற்று (03-11-2018) நடைபெற்றது!

2 .0 படத்தின் டிரைலர் வெளியீடு விழா நேற்று (03-11-2018) நடைபெற்றது!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் தான் 2.0. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.

இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியவை                                          “2 .0 படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் படத்தில் சரியாக நடிக்க முடியவில்லை. எனவே படத்தில் இருந்து நான் வெளியேறுவதாக கூறினேன். வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுப்பதாக சொன்னேன். ஆனால் ஷங்கர் விடவில்லை. படம் முக்கியம் அல்ல, நீங்கள் தான் முக்கியம் என்று தயாரிப்பாளர் சுபாஷ் சொன்னார். உடல்நிலை சரியான பிறகு கூட படத்தை எடுக்கலாம். ஆனால் நான் திரும்ப வர வேண்டும் என்று சுபாஷ் சொன்னார். இவரை போன்ற ஒரு நல்ல நண்பரை பார்ப்பது கடினம் என்றார்.

முதலில் படப்பிடிப்பு துவங்கும்போது 300 கோடி பட்ஜட்டில் துவங்கியது.கடைசியில் 550 கோடியில் வந்து நின்றது.கண்டிப்பாக அதைவிட இரண்டு மடங்கு லாபத்தை படம் ஈட்டும்.ஆனால் தவிர்க்க முடியாத படமாக 2.0 மாறியது. எப்போது வரனும் என்பது முக்கியமல்ல வெற்றி பெறுவதுதான் முக்கியம். லேட் ஆனாலும் கரெக்டா வரனும். வந்தாச்சு வெற்றி உறுதியாகிவிட்டது. ஹிட் ஆக்குவதுதான் பாக்கி… நான் படத்தை சொன்னேன் என தனக்கே உரிய பாணியில் கூறினார். வாழ்த்து கூறிய எனது நண்பர் கமல் ஹாசனுடன் ஷங்கர் செய்யும் ‘இந்தியன் -2’ மாபெரும் வெற்றி பெரும்.

இந்த விழாவில் இயக்குனர் ஷங்கர் பேசியவை

2 .0 படத்தின் டிரைலர்“2.O திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, அக்ஷய் குமார் கடுமையாக உழைத்து நடித்தனர். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கிளைமேக்சில் நடித்தார் ரஜினி. நல்ல கதை அமைந்தால் 3.0 திரைப்படம் எடுக்க வாய்ப்பு உள்ளது “என பேசினார்.

விழாவில் இசையமைப்பாளர் A .R ரஹ்மான் பேசியவை                    “ரஜினி சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.அவரது கடின உழைப்பு இந்த வயதிலும் கூட.அதனால் தான் அவர் சூப்பர்ஸ்டார் என புகழ்ந்து பேசினார்,

விழாவில் அக்‌ஷய் குமார் அவர்கள் பேசியவை !
ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் உடன் 2.0 படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி, உங்கள் அன்பிற்கு நன்றி என நடிகர் அக்‌ஷய் குமார் தமிழில் பேசினார்.

விழாவில் எமி ஜாக்சன் பேசியவை!
இந்திய சினிமாவில் இரண்டு உச்ச நட்சத்திரங்களுடன் நடித்ததில் மகிழ்ச்சி .வாய்ப்பளித்த ஷங்கர் அவர்களுக்கு நன்றி என பேசினார்.

விழாவில் கலை இயக்குனர் முத்துராஜ் பேசியவை ” மிகவும் சந்தோசமாக உள்ளது.ரஜினி சார் ரசிகனாக இருந்து அவர் படத்துலயே வேலை பார்ப்பது.ஷங்கர் அவர்களுக்கும்,தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அவர்களுக்கும்,படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி என பேசினார்.

விழாவில் சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி பேசியவை                                “இவ்வளவு பெரிய படத்தில் பணிபுரிந்து மிகவும் சந்தோசமாக உள்ளது.இயக்குனர் ஷங்கர் ,ரஜினி சார்,அக்சய் சார் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோருக்கு நன்றிகளும்,வாழ்த்துக்களும் ” என பேசினார்.

விழாவில் படத்தொகுப்பாளர் ஆன்டனி பேசியவை                                      “வாய்ப்பளித்த இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கும் சுபாஷ்கரன் அவர்களுக்கும் நன்றி.இந்திய சினிமாவில் மிகப்பெரிய படம்.அனைவருக்கும் நன்றி ” என பேசினார்.

விழாவில் ஸ்ரீநிவாசன் மூர்த்தி பேசியவை                                      “இப்படத்தில் நிறைய டெக்நாலஜி பயன்படுத்தி உள்ளோம்.எனது டீம் முழு ஒத்துழைப்பு இதற்க்கு காரணம்.மிகவும் அருமையாக vfx வந்துள்ளது.படத்தில் வாய்ப்பளித்த ஷங்கர் சார் அவர்களுக்கு நன்றி.மூன்று வருடத்திற்கு மேலான உழைப்பு இப்படம் ” என பேசினார்.

2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர் 2 .0 படத்தின் டிரைலர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]