2.0 திரைப்படத்தின் டீசர் இணையத்தில் கசிந்தமைக்கான காரணம் வெளியானது!! (வீடியோ உள்ளே)

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் 2.0 திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே இணையதளத்தில் கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

தற்போது இதுக்குறித்து விசாரணை நடத்தி வர, லண்டனில் lyca Telecom நிறுவனத்தில் உள்ள தயாரிப்பாளர் தரப்பில் சில பேருக்கு இந்த Teaser போட்டு காண்பிக்கும் போது யாரோ ஒருவர் இதை எடுத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இது இயக்குனர் ஷங்கரையும் மிகவும் அப்செட் ஆக்கியுள்ளது, மேலும், இதை தொடர்ந்து கண்டிப்பாக டீசர் லீக் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிகின்றது.

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக 2.0 திரைப்படம் தயாராகியுள்ளது. ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். ஏப்ரல் மாதம் திரைப்படம் வெளியாகும் என படதயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த படத்தின் டீசர் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது. 1.27 நிமிட காட்சிகள் இந்த டீசரில் உள்ளன. டீசரின் முடிவில் ரஜினிகாந்த் குக்கூ என கூறுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட காலா திரைப்படத்தின் டீசரும் இதே போல, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக இணையத்தில் வெளியானது.

இப்படி தொடர்ந்து படங்களின் டீசர் மற்றும் டிரைலர்கள் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாக இணையத்தில் லீக் ஆவது திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]