2.0 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் துபாய் மன்னர்

2.0 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் துபாய் மன்னர்

2.0

2.0 படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் கடுமையாக இடம்பெற்று வருகின்றது.

எதிர்வரும் 27ம் திகதி   2.0 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

2.0

இந்நிலையில் 2.0  இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் நேரலையில் 125 இசை கலைஞர்களை வைத்து ஒரு பாடலுக்கு இசை அமைக்கவுள்ளார்.

மேலும் வாஸ்கோ நடன கலைஞர்கள் நேரலையில் கண்கவர் நடனம் ஆட உள்ளதுடன், துபாயில் மட்டும் ஒரு லட்சம் பேர் காணும் வகையில் சுமார் 2 கோடியில் பிரம்மாண்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

2.0

இந்த நிகழ்ச்சியில் துபாய் மன்னர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன், நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளதாகவும்  குறிப்பிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]