2.0 இல் மிரட்டும் அக்ஷய் குமாரின் கெட்டப் உருவானது இப்படி தான் – வைரல் வீடியோ!

சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் இம்மாதம் 29 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தில் எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெயிலர் காட்சிகளாலும் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தில் வில்லனாக நடிக்கும் அக்‌ஷய் குமாரின் லுக் வெளியானது முதலே, அதிகம் பேசப்பட்டது. பறவையின் தோற்றத்துடன் உள்ள அவரது தோற்றம்,  வில்லனுக்கு ஏற்ற தோற்றமாக உள்ளது என பலரும் பாராட்டியுள்ளனர்.

தற்போது, படத்துக்கான ப்ரொமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அக்‌ஷய் குமார் தோற்றம் உருவானது குறித்த வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மேக்கிங் வீடியோவைப் பார்த்தால், படத்துக்காக அக்‌ஷய் குமார் உள்ளிட்ட கலைஞர்கள் போட்டிருக்கும் உழைப்பு தெரிகிறது. இந்த வீடியோ, படத்துக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இதோ வீடியோ….

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]