2 வது பயிற்சிப் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி

2 வது பயிற்சிப் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி.

இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 2  வதும் இறுதியான பயிற்சிப் போட்டி நிறைவுக்கு வந்திருக்கின்றது.

இந்தப் போட்டியில் அஜின்கியா ரஹானே தலைமையிலான இந்திய A அணி 6  விக்கெட்டுக்களால் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே தடுமாறியது , அவர்களது முதல் 8 விக்கெட்டுக்களும் வெறுமனே 198  ஓட்டங்களில் வீழத்தப்பட்டாலும் அதன் பின்னர் ஆதில் ரஷீத் மற்றும் டேவிட் வில்லி ஆகியோரின் அதிரடியில் இங்கிலாந்து அணி 282  ஓட்டங்கள் குவித்தது.

பதிலுக்கு ஆடிய இந்திய A அணிக்கு ஆரம்ப வீரர்கள் ரஹானே மற்றும் செல்டன் ஜாக்சன் ஆகியோர் நல்ல ஆரம்பம் கொடுத்தனர்.ஆரம்ப விக்கெட்டில் 119  ஓட்டங்கள் பகிரப்பட்டது.

அதன்பின்னர் ஆடுகளம் புகுந்த இளம் வீரர் ரிஷப் பாண்ட் அதிரடியாக 59  ஓட்டங்களும் பெற்றுக்கொடுக்க , ரெய்னாவின் 45  ஓட்டங்கள் துணையுடனும் 4  விக்கெட்டுக்களை மட்டும் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.

அணித்தலைவர் ரஹானே 91  ஓட்டங்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.