20 ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் மௌன அறவழி போராட்டம் !!

வருகிற 2௦ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் மௌன அறவழி போராட்டம் !!

இந்தியா பல மொழி கலாச்சாரங்கள் கொண்ட தேசம் !

nadigar sangam

இங்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிதனி அடையாளம் இருக்கிறது. அதை கட்டிக் காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளாக சிந்துசமவெளி நாகரீகத்திலிருந்து இன்றுவரை நமது தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக ஏறுதழுவுதல் இருந்து வருகிறது.

nadigar sangam

அதை நடத்த விடாமல் பலவருடங்களாக நீதி மன்றங்கள் மூலம் தடைகளும் , அதை நாம் மீட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதுமாக இருந்து வருகிறோம்.கடந்த மூன்று வருடம் அதுவும் நடக்காமல் தமிழர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். “ பொறுத்தது போதும் “ என்று இன்று தமிழர்கள் பொங்கி அதற்கு நிரந்தர தீர்வுக்காக எழுந்துள்ளனர்.குறிப்பாக மண்ணின் மைந்தர்கள் , மாணவர்கள் ,இளைஞர்கள் இன உணர்வை வெளிபடுத்த தமிழகமெங்கும் களமிறங்க போராடி வருகிறார்கள். 1965 ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு தமிழகம் கண்டுள்ள மிகப்பெரிய மாணவர்கள் போராட்டமாக மாறி உள்ளது. இந்த ஒற்றுமை எங்களுக்கு பெரும் மகிழ்வை தருகிறது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் வருகிற 2௦ஆம் தேதி காலை 8மணி முதல் மாலை 6 மணி வரை வளாகத்தில் உணர்வை வெளிபடுத்தும் வகையில் மௌன அறவழி போராட்டத்தை அறிவிக்கிறோம்.

nadigar sangam

மாணவர்கள் பின்னால் இருந்து மத்திய அரசுக்கும் , சட்டதுறைக்கும் அழுத்தம் தந்து , “ ஜல்லிகட்டுக்கு நிரந்திர தீர்வை “ பெறும் வரை போராடுவது என தீர்மானித்திருக்கிறோம் !