வேகமான வளர்ச்சியைக் கொண்ட 2வது துறைமுகம் கொழும்பு துறைமுகமாகும்

கொள்கலன்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற துறைமுகங்களுள் மிக வேகமான வளர்ச்சியை கொண்ட 2வது துறைமுகம் கொழும்பு துறைமுகமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
மொரோக்கோவின் டக்லா நகரில் நடைப்பெற்ற சர்வதேச கிரான்ஸ் மொன்டான சமுத்திரவியல் மகாநாட்டில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

‘ இருபத்தோராம் நூற்றாண்டு பொருட்டு புதிய ஆபிரிக்க தேசம்’ (வுழறயசனள ய நெற யுகசiஉய கழச வாந 21ளவ உநவெரசல) எனும் தலைப்பில் இடம்பெற்ற கிரான்ஸ் மொன்டான மகாநாடு நேற்றைய தினம் நிறைவடைந்தது.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வளர்ச்சி வீதமானது 10.6 சதவீதமாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

‘தற்சமயம் இலங்கையில் சமாதானமான அரசியல் சூழ்நிலை நிலவுகின்றது. முதலீட்டாளர்கள் மற்றும் அரசாங்கம் மிகவும் நட்புடன் செயற்படுகின்றன. இதன் காரணமாக கொழும்பு , ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் திருகோணமலை ஆகிய வணிக துறைமுகங்களில் முதலீடுகள் மேற்கொள்ள முடியும். இம்முதலீட்டு சந்தர்ப்பங்கள் தொடர்பாக அறிந்துக்கொள்ளும் பொருட்டு எங்கள் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.’ என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டார்.

இந்த மகாநாட்டில் ஆபிரிக்காவின் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு , அரசியல் மற்றும் பொருளாதார செயற்பாடுகளின் பொருட்டு பெண்களின் பங்களிப்பு , ஆபிரிக்காவின் சிறு தீவுகளை அபிவிருத்திச் செய்தல் , எதிர்கால தலைமைத்துவம், வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் அனுசக்தி உற்பத்தி மற்றும் பகிர்ந்தளித்தல், ஆபிரிக்கா , சிறு தீவுகளில் மக்கள் குடியேற்றங்களை அபிவிருத்திச் செய்தல் மற்றும் சமுத்திரவியல் வர்தகம் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

‘ இலங்கை துறைமுக அபிவிருத்தி கொள்கை மற்றும் திட்டங்கள்’ எனும் தலைப்பின் கீழ் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உரையாற்றினார்.

‘தற்சமயம் இலங்கையின் துறைமுக சேவையினை தெற்காசியாவில் மிகவும் செயற்றிறன் மிக்க மற்றும் அர்பணிப்புடன் கூடிய சேவையை வழங்குகின்ற மத்திய நிலையமாக அபிவிருத்திச் செய்யும் பொருட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இச்செயற்பாட்டில் எங்களுடைய பிரதான துறைமுகமாக கொழும்பு துறைமுகம் திகழ்கின்றது. இலங்கைக்கு வருகின்ற 87 சதவீதமான கப்பல்களின் செயற்பாடுகளும் கொழும்பு துறைமுகத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. 100வீத கொள்கலன்கள் செயற்பாடுகளும் கொழும்பு துறைமுகத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. அல்பாலைனர் தரப்படுத்தலிற்கமைவாக 2015ம் ஆண்டில் 26வது இடத்தில் காணப்பட்ட கொழும்பு துறைமுகமானது 2016ம் ஆண்டு தரப்படுத்தலிற்கமைவாக 23வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் அடிப்படையில் கொள்கலன்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற துறைமுகங்களுள் மிக வேகமான வளர்ச்சியை (10.6சதவீதம்) கொண்ட 2வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம் திகழ்கின்றதென…’ அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கிரான்ஸ் மொன்டான இயக்கமானது 1986ம் ஆண்டு சுவிஸ்லாந்தில் ஆரம்பமாகியது. உயர் பொறுப்புக்களை வகிக்கின்ற அனைத்து தரப்பினரிடையேயும் உறுதியான கலந்துரையாடல்களை ஏற்படுத்துவதே இவ்வியக்கத்தின் குறிக்கோளாகும். இதன் முதலாவது மாநாடு 1990ம் ஆண்டு நடைப்பெற்றது.

இம்மகாநாட்டில் ஆபிரிக்கா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறு தீவுகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.