1983ஆம்ஆண்டு ஜுலைக்கலவரம் நடக்காமலிருந்திருந்திருந்தால் நான் தமிழில் பேசியிருப்பேன்

1983ஆம்ஆண்டு ஜுலைக்கலவரம் நடக்காமலிருந்திருந்திருந்தால் நான் தமிழில் பேசியிருப்பேன் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்காளர் தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் திணைக்கத்தினால் வருடா வருடம் நடத்தப்படும் வாக்காளர் தினத்தை முன்னிட்டு மக்களை விழிப்பூட்டும் ஊர்வலம் மற்றும் விசேட நிகழ்வுகளின் பிரதான நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட் டஅரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இன்றைய வாக்காளர் தின நிகழ்வில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் எஸ்.ரத்னஜீவன் எச்.கூல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

1983 ஆம் ஆண்டு

வாக்காளர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையத்தில் நடைபெற்ற வீதி நாடகம், விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி வழிப்பூட்டும் ஊர்வலம் மட்டக்களப்பு நகர வீதி ஊடாக மணிக்கூட்டுக்கோபுரம், காந்திப்பூங்கா, வழியாக, மட்டக்களப்பு தேர்தல்கள் அலுவலகம் வரை சென்றது. அதன் பின்னர் மண்முனை வடக்கு பிரதேச செலயகத்தில் அமைந்துள்ள டேர்பா மண்டபத்தில் பிரதான நிகழ்வுகள் நடைபெற்றன.

அங்கு , மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையுரையை அடுத்து, நிகழ்வுகள் ஆரம்பமாகின. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் எஸ்.ரத்னஜீவன் எச்.கூல் சிறப்புரையாற்றினார். கிராம உத்தியோகத்தர் என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புட்டும் நாடகம் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தினால் அரங்கேற்றப்பட்டது.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

1967ஆம் ஆண்டு தேர்தல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தில் உதவித்தேர்தல்கள் ஆணையாளராக கடமையாற்றிய ஒஸ்ரின் பெர்ணான்டோ ஜனாதிபதியின் செயலாளராக இன்றைய தினம் கடமையேற்பதனையிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு மகிழ்ச்சியடைகிறது. அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

1983 ஆம் ஆண்டு

ஆண், பெண், இன, மத, மொழி, படித்த, படிக்காத, பணக்கார, வறியவர்கள் என்ற வித்தியாசம் இன்றி அனைவருக்கும் பொதுவானதே வாக்குரிமையாகும். 18 வயதான ஒவ்வொருவரும் தமது உரிமையை பெற்றுக் கொள்ளவேண்டும். கட்டாயமாகக்கிடைக்கின்ற மரணத்தினை நாம் விருமத்புவதில்லை. ஆனால் வாக்கினை விரும்புகிறோம். வாக்கின் மூலம் சரியான தலைவர்களை உருவாக்கினால் நாம் வள்ளம் மூலம் அவுஸ்திரேலியாய செல்லத் தேவையில்லை.

வாக்குப் புத்தகத்தில் பெயரிரிருந்தால் வாக்குண்டு. பெயரில்லாவிட்டால் வாக்கில்லை. நல்ல அபிவிருத்தி, சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்குக்கூட வாக்கு முக்கியம் பெறுகிறது.

தேர்தல் நடைபெறவில்லை என்று மக்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பேசுகின்றனர். ஆனால் தேர்தலை நடத்துகின்ற அதிகாரம் மாத்திரமே எம்மதிடமுள்ளது. அதற்கான அனுமதி , அதிகாரங்களை பாராளுமன்றம் தான் தரவேண்டும். உதாரணமாக கிரிக்கட் போட்டியை நடத்துவதற்கான மைதான், வீரர்கள், வசதிகள் இருந்தாலும், அதற்கு ஐ.சீ.சீ. அனுமதி தரவேண்டும் இல்லையானால் போட்டியை நடத்த முடியாது. அது போலத்தான் எமது நிலைமை.

உள்ளுராட்சித் தேர்தல்களைப் பொறுது;தவரையில், உள்ளுராட்சித் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிற போதுதான் உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தமுடியும். விரைவில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானமும் இதில் முக்கியமானது.

1983 ஆம் ஆண்டு

தேர்தலில் தமது வாக்கு மூலம் அரசியல்வாதி ஒருவரைத் தெரிவு செய்வதுடன் எமது கடமை முடிந்தது என்று மக்கள் நினைத்துவிடமுடியாது. தேர்தல்கள் நடத்தப்படவில்லையானால் மக்கள் கேள்வி கேட்க வேண்டும். மக்கள் கிளர்ந்தெழவேண்டும் என்றார்.

1983ஆம்ஆண்டு மட்டக்களப்பு தேர்தல்கள் அலுவலகத்திற்கு ஜுலைக்கலவரம் காரணமாக என்னால் வரமுடியாமல் போனது. 1984இல் திருகோணமலைக்கு எனக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. நான் அங்கு செல்லாமல் மட்டக்களப்புக்கு வந்திருந்தால் இப்போது தமிழில் பேசியிருப்பேன் என்றும் கவலை தெரிவித்தார்.

நிகழ்வின் இறுதியில் வாக்காளர்தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியல் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் , மாற்றுத்திறனாளிகளின் அரசியல் உரிமை தொடர்பான ஆவணம் தேர்தல்கள் ஆணையாளரிடம் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்தினாளிகள் சம்மேளத்தினால் கையளிக்கப்பட்டன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]