194 புதிய ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வடமாகாண முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்றது

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யும்பொருட்டு 194 புதிய ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாட­சா­லை­க­ளில் நில­வும் பதவி வெற்­றி­டங் க­ளுக்கு பட்­ட­தா­ரி­களை ஆள்­சேர்ப்பு செய்­வ­தற்­காக வட மாகாண பொதுச் சேவை ஆணைக்­கு­ழு­வால் கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதி நடத்­தப்­பட்ட திறந்த போட்­டிப் பரீட்­சைக்­குத் தோற்றி சித்­தி­ய­டைந்த 194 பேருக்கு இவ்வாறு தமிழ் மொழிமூல பாடங்களுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் தலைமையில் யாழ் பொதுநூலக கேட்போர்கூடத்தில் இன்று மாலை இந்நிகழ்வு இடம்பெற்றது
இதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கிவைத்தார்.

வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்,எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]