1901க்கு அல்லது 0112 422 259 அழைப்பு விடுக்கும் பொதுமக்களிடம் கேட்கப்பட்டுள்ளது

திருட்டுத்தனமாக மின்சாரம் பெறுவோர் பற்றிய தகவல்கள் இருந்தால், 0112 422 259 அல்லது 1901 அல்லது 1987 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு, பொதுமக்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

திருட்டுத்தனமாக மின்சாரம் பெற்ற 2,617 பேருக்கு எதிராக, கடந்தாண்டில் மாத்திரம், இலங்கை மின்சார சபையின் விசேட புலனாய்வுப் பிரிவு, சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் காரணமாக, இலங்கை மின்சார சபைக்கு 132 மில்லியன் ரூபாய், வருமானமாகக் கிடைக்கப்பெற்றுள்ளது.