19 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக சுமார் 12 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனா்

19 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக சுமார் 12 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.19 மாவட்டங்களில்

சுமார் ஐந்து இலட்சம் பேர் வட மாகாணத்திலேயே வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 34 ஆயிரத்து 129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர கிழக்கு மாகாணத்தில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 16 ஆயிரத்து 300 குடும்பங்களை சேர்ந்த 57 ஆயிரத்து 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமன, அம்பாறை, அக்கரைப்பற்று, மஹஓய, பொத்துவில், திருக்கோவில், உஹன, நவகம்வெளி உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் இதனால் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]