19 பந்தில் அரை சதம் விளாசிய கிறிஸ்லின்

19 பந்தில் அரை சதம் விளாசிய கிறிஸ்லின் அதிவேக அரை சதம் அடித்த ஐ.பி.எல். வீரர்களில் பட்டியலில் 7ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்லின். 26 வயதான இவர் 2014ஆம் ஆண்டில் இருந்தே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

நேற்றைய ஐ.பி.எல். போட்டியில் கிறிஸ் லின்னின் தொடக்கமே அதிரடியாக இருந்தது. அவர் 41 பந்தில் 93 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 6 பவுண்டரிகள், 8 சிக்சர்களும் அடங்கும். அவரது அதிரடியான ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது.

கிறிஸ்லின் தனது அரை சதத்தை 19 பந்துகளில் தொட்டார். இதன்மூலம் அதிக வேகத்தில் அரை சதம் அடித்த ஐ.பி.எல். வீரர்களில் ஆந்த்ரே ரஸ்சல், ஹர்பஜன்சிங், டேவிட் மில்லர், ராபின் உத்தப்பா, ஒவாசிஸ் ஷா ஆகியோருடன் இணைந்து 7ஆவது இடத்தை பிடித்தார். யூசுப் பதான் 15 பந்தில் 50 ஓட்டங்களை எடுத்து அதிவேகத்தில் ஐ.பி.எல்.லில் அரை சதம் எடுத்தவர் என்ற சாதனையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் குஜராத் லயன்ஸ் 183 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. என்றாலும், கொல்கத்தா டைட் ரைடர்ஸ் 184 ஓட்டங்களை விக்கெட் இழப்பின்றி பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.