188 ஓட்ட இலக்கை எட்ட முடியாமல் 81 ஓட்டங்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான்

188 ஓட்ட இலக்கை எட்ட முடியாமல் 81 ஓட்டங்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 11 என்று சமன் ஆகியுள்ளது. முதல் இன்னின்சில் மே.இ.தீவுகளின் புதிய சுவர் சேஸ் 131 ஓட்டங்களை எடுக்க ஹோல்டர் 58 ஓட்டங்களுடன் அவருக்கு உறுதுணை புரிய 312 ஓட்டங்களை எடுத்தது மே.இ.தீவுகள். பாகிஸ்தான் தரப்பில் ஆமிர் 3 விக்கெட்டுகளையும், மொகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் அசார் அலி (105) ஷேசாத் (70) நல்ல தொடக்கம் கொடுத்தாலும் இடையில் விக்கெட்டுகள் சரிய தலைவர் மிஸ்பா 99 ஓட்டங்களை எடுத்தார். பாகிஸ்தான் 393ஓட்டங்களை எடுத்து 81 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், 2ஆவது இன்னிங்சை மே.இ.தீவுகள் ஆடி ஷாய் ஹோப் என்ற வீரரின் அருமையான 90 ஓட்டங்களுடன் 268 ஓட்டங்களுக்குச் சுருண்டது, யாசிர் ஷா 94 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
நேற்றுமுன்தினம் 5ஆம் நாள் ஆட்டத்தில் 188 ஓட்டங்கள் வெற்றி இலக்குடனும், தொடரை வெல்லும் கனவுடனும் பாகிஸ்தான் களமிறங்கியது.

கடைசி நாளில் வேகப்பந்து வீச்சாளர் ஷனன் கேப்ரியல் பந்து வீச்சில் தீப்பொறி பறந்தது. பாகிஸ்தான் பேட்ஸ்மென்கள் பிட்ச் பற்றிய பயத்தில் மிகவும் மட்டைப்போட்டு ஆடும் தடுப்பாட்டத்தைக் கையாண்டது தவறாகிப் போனது. 34.4 ஓவர்களில் 81 ஓட்டங்களை மாத்திரமே பாக்கிஸ்தானால் பெற முடிந்தது.

20 ஆண்டுகளுக்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் தலைமை இந்திய அணி பிரையன் லாரா தலைமை மே.இ.தீவுகள் அணியிடம் இதே மைதானத்தில் இத்தகைய தோல்வியைத் தழுவியது, அப்போதும் இந்தியா 120 ஓட்ட இலக்கைத் துரத்த முடியாமல் 81 ஓட்டங்களுக்குச் சுருண்டது. சச்சின், திராவிட், கங்குலி, லஷ்மண். அசாருதீன் என்று நட்சத்திரப் பட்டாளம் இருந்தும் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது இந்தியா. சச்சின் டெண்டுல்கர் கடும் கோபத்துடன் 2 நாட்கள் யாருடனும் பேசாமல் இருந்தார் என்று அப்போதைய செய்திகள் விளித்தன.

பிரிட்ஜ்டவுனில் துணைக்கண்ட அணி இதுவரை மே.இ.தீவுகளை வீழ்த்தியதில்லை என்பது தற்போது பாகிஸ்தான் அணியால் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்க இந்தியா போலவே 81 ஓட்டங்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான்.

188 ஓட்ட இலக்கை

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]