185 ஓட்டங்களை குவித்தும் தோல்வியை தழுயது ஐதராபாத்

185 ஓட்டங்களை குவித்தும் தோல்வியை தழுயது ஐதராபாத் அணி.

பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய நடப்பு சாம்பியன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களைக் குவித்தது.

185 ஓட்டங்களை குவித்தும்

யுவராஜ்சிங் 41 பந்தில் 70 ஓட்டங்களும் (11 பவுண்டரி, 1 சிக்சர்), வார்னர் 21 பந்தில் 30 ஓட்டங்களும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். முகமது ஷமி 2 விக்கெட்டும், அமித் மிஸ்ரா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய டெல்லிடேர்டெவில்ஸ் 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆண்டர்சன் 24 பந்தில் 41 ஓட்டங்களும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), கருண் நாயர் 20 பந்தில் 39 ஓட்டங்களும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

டெல்லி அணி பெற்ற 3ஆவது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி 5 போட்டியில் தொடர்ச்சியாகத் தோற்றதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. மேலும் ஐதராபாத்திடம் ஏற்கனவே தோற்றதற்கு பதிலடி கொடுத்தது.

டெல்லி அணித் தலைவர் ஜாகிர்கான் காயம் காரணமாக ஆடாததால் கருண் நாயர் தலைவராகப் பணியாற்றினார். வெற்றி குறித்து அவர் கூறியதாவது:

டெல்லி அணி இளம் வீரர்களை கொண்டது. பயப்படாமல் விளையாடி ஆட்டத்தை வெற்றிபெற்று கொடுத்தனர். இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பந்து வீச்சாளர்கள் மிகவும் நேர்த்தியாக பந்து வீசினார்கள். தொடக்கத்தில் விக்கெட் விழுந்ததால் சிறிது ஏமாற்றம் அடைந்தேன். முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்றார்.

ஐதராபாத் அணி 4ஆவது தோல்வியை தழுவியது. 185 ஓட்டங்கள் குவித்தும் தோற்றதால் அந்த அணி தலைவர் வார்னர் ஏமாற்றம் அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

186 ஓட்டங்கள் என்பது கடினமான இலக்குதான். ஆனால் டெல்லி அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். அந்த அணியின் பேட்டிங்கை எதிர்பார்க்கவில்லை. பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. இந்த தோல்வி சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது. யுவராஜ் சிங்கின் துடுப்பாட்டம் அபாரமாக இருந்தது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]