183 ஆக உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு : 103 பேரை காணவில்லை

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு முதலான இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்திருப்பதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை தற்போது 5 இலட்சத்து 45ஆயிரத்து 283 ஆகும். காயமடைந்தோர் 112 மற்றும் 103 பேர் காணாமல் போயுள்ளதாவும் இடர் முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

361 நலன்புரி முகாம்களில் 80 ஆயிரத்து 409 பேர் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
768 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் பகுதியளவில் 5869 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் அதிகளவில் மாத்தறை மாவட்டத்தில் 2127 சேதமடைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]