17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது (படம் இணைப்பு)

17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

17 தமிழர்கள் படுகொலைமட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27வது ஆண்டு நினைவேந்தல் நேற்று வியாழக்கிழமை (21) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி இரவு 7 – 8 மணியளவில் புதுக்குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்த சிலர் வீடுகளின் உறங்கிக் கொண்டிருந்தவர்களின் 45 அப்பாவி தமிழ் மக்களை விசாரணைக்கென கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணைக்கென அழைத்துச் சென்றவர்களில் சிலர் உயிர் தப்பியுள்ள போதிலும், நள்ளிரவுவேளை பெண்கள் சிறுவர்கள் உட்பட 17 பேரை கொடூரமாக கொலை செய்துள்ளனர். இவர்களது சடலங்கள் துப்பாக்கி காயம் மற்றும் வெட்டுக் காயங்களுடன் பிரதேச மக்களினால் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

17 தமிழர்கள் படுகொலை

27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் நினைவுத் தூபியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு மலர் தூவி ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. விஷேட பிரார்த்தனை மற்றும் கூட்டமும் நடைபெற்றது.

இ.வரதராஜன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், கிழக்கு மாகாண சபையின் பிரதிதவிசாளர் நி.இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, உறவுகளை இழந்த குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு செய்யப்பட்டவர்களின் உறவுகள்,பொதுமக்கள் கலந்து கொண்டார்கள.

17 தமிழர்கள் படுகொலை17 தமிழர்கள் படுகொலை17 தமிழர்கள் படுகொலை17 தமிழர்கள் படுகொலை17 தமிழர்கள் படுகொலை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]