பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் 1670 பேர் கைது

நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 1,670 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்களில், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 397 பேர், குடிபோதையில் வாகனத்தை செலுத்திய 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று அதிகாலை 3.00 மணிவரை இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

5 சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்த மற்றும் பல்வேறு குற்றசெயல்களுடன் தொடர்புடைய 554 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

11 கிலோகிராம் கஞ்சா, 13.943 கிராம் ஹெரோய், 3,860 லீட்டர் சட்டவிரோத மதுபானம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

போக்குவரத்து குற்றம் தொடர்பில் 3, 715 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சோதனை நடவடிக்கையின் போது 20 ஆயிரத்து 913 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.