16 பேர் கொண்ட அணிக்கு தலைவர் உள்ளிட்ட பதவிகள் – தயாசிறி ஜயசேகர

தயாசிறி ஜயசேகர

எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணி, தமக்கென தலைவர், தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் போன்ற பதவிகளை விரைவில் உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாத்தறையில் தமது முதலாவது கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதுடன், இரண்டாவது கூட்டம், மாத்தளையில் ஜூன் நடுப்பகுதியில் இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், எம்மால் வெற்றிகரமாக அரசியல் பயணத்தை தொடர முடியும் என்றும், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், ஏனைய பங்காளர்களுடன் இணைந்து பொதுவான அரசியல் தளம் ஒன்றைக் கட்டியெழுப்ப முடியும்.

இதன் அர்த்தம், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் நாங்கள் இணைவதோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பொதுஜன முன்னணி இணைவதோ அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]