16 பேர் அணி – சந்திப்பு

எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் புதன்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதான தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

புஞ்சிபொரளையில் உள்ள திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் வரும் புதன்கிழமை மாலை 5 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]