16 நாய்குட்டிகளை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த இரண்டு தாதி மாணவிகள் பொலிஸாரால் கைது!

இந்தியா மேற்குவங்க மாநில பகுதியில் 16 நாய்க்குட்டிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

கொல்கத்தா நகரில் அமைந்துள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்தே இந்த நாய் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் உத்தரவின் பேரில் கால்நடைத்துறையில் இறந்துபோன நாய்க்குட்டிகளை பரிசோதனை செய்துள்ளனர்.

அதில், அந்த நாய்க்குட்டிகள் அனைத்தும் கட்டிப்போட்டு விஷம் வைத்தும், சாக்கு மூட்டைகளில் அடைத்து வைத்தும் அதன் பின்னர் கொடூரமாக தாக்கியும் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இப்படி இந்த நாய் குட்டிகளை கொடூரமாக தாக்கி கொலை செய்தது இரண்டு தாதி மாணவிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாணவிகள் நாய் குட்டிகளை கொலை செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]