16 உறுப்பினர்கள் சந்திப்பு

அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட கட்சியின் அரசியல் குழுவினை சந்தித்துள்ளனர்.

பிட்டகோட்டையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி தலைமையகத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான, தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே, ஜோன் அமரதுங்க, டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி, அநுராதா ஜயரத்ன, திலங்க சுமதிபால உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]