16வயது பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

வவுனியாவில் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு வவுனியா வேப்பங்குளம் 95/34C விலாசத்தில் வதித்த விபுலாந்தா கல்லூரியில் தரம் 11ல் கல்வி கற்று வந்த விஜயகுமார் நிலுக்சனா என்கின்ற 16 வயது மாணவியே தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்றைய தினம் (03.04.2018) மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவது நேற்றைய தினம் குறித்த மாணவி பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த மாணவி தனது பாடசாலை சீருடைகளை துவைத்து தனது சப்பாத்துக்களையும் கழுவி பின்பு மதிய உணவு உண்டு விட்டே தற்கொலை செய்துள்ளார் என்று அறியப்படுகிறது இதேவேளை குறித்த மாணவியின் பெற்றோர்கள் அரச உத்தியோகத்தர்கள் என்பதினால் இருவரும் பணிக்கு சென்றிருந்த வேளை மாணவி வீட்டில் தனியாகவே இருந்துள்ளார்.

என்பதும் குறிப்பிடத்தக்கது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர் இதேவேளை இன்று அதிகாலை வவுனியா கற்குழியை சேர்ந்த 18 வயதுடைய மாணவன் ஒருவனும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]