16அடி நீல பாம்புடன் இளம்பெண் செய்யும் செயலை நீங்களே பாருங்க -வீடியோ உள்ளே

லண்டனில் உள்ள இளம் பெண் ஒருவர் தினமும் அவரின் படுக்கை அறையில் பாம்புகளுடன் உறங்குவதாக கூறியுள்ளார்.இவ்வாறு பாம்புகளுடன் உறங்குவதால் மனம் நிம்மதியுடன் இருக்கும் அதிசயம் நிகழ்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஜீயி என்ற இளம் பெண்ணே இவ்வாறு பாம்புகளுடன் வாழ்வதுடன், பல முறை கடி வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வெளிநாட்டு ஊடகங்கம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

21 வயதான ஜீயின் கால்நடை செவிலியர் பயிற்சி படித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு 14 வயது இருக்கும்போது, முதல் முறையாக ஒரு பாம்பை பராமரிக்க ஆகும் செலவை தனது இளைய சகோதரனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.  தற்போது ஜீயிடம் 16 பாம்புகள் உள்ளன, அதில் 16அடி பர்மீஸ் இன மலைப்பாம்பும் ஒன்று. ஒரு குருதி மலைப்பாம்பு, சிறப்பு மிக்க மலைப்பாம்பு மற்றும் இந்த 16அடி நீல பர்மீஸ் மலைப்பாம்பு போன்றவற்றுடன் அவர்கள் வீட்டின் அறையில் தவழ்ந்து விளையாடுவது ஜீக்கு மிகவும் பிடித்தமான செயலாகும்.

“எண்ணற்ற முறை இவைகள் என்னைக் கடித்துள்ளன. ஒப்பீட்டளவில் தொடர்ச்சியாக என்னை அவைகள் விடுவிக்காமல் கூட இருந்திருகின்றன.

இத்தகைய சூழ்நிலைகளை நான் சந்தித்திருக்கிறேன், இது நிதானத்தையும், அதன் தீவிரத்தையும் சார்ந்துள்ளது. பாம்புகள் உங்களைப் பிடித்துக் கொண்டு, விடாமல் இருக்கும் நேரத்தில் மதுபானத்தை பயன்படுத்தும்போது உடனடியாக அதற்குள் தலையை மூழ்கிக் கொள்ளும் தன்மை அவற்றிற்கு உண்டு.உங்களை கொலை செய்யும் நோக்கம் பாம்புகளுக்கு இல்லை. ஆனால் உங்களை விடுவிக்கும் எண்ணமும் அவைகளுக்கு இல்லை. அவைகள் ஒரு ஆர்வமுள்ள உயிரினங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜீயின் பாம்பில் மிகப்பெரியதான பர்மீஸ் மலைப்பாம்பு தோராயமாக 28 கிலோ எடையைக் கொண்டுள்ளது.பயிற்சி நேரத்தில் இந்த பாம்பை வெளியில் எடுத்து கொண்டு செல்ல இரண்டு நபர் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.மலைப்பாம்பிற்கு மாதத்திற்கு ஒரு முறை ஒரு மிகப் பெரிய , தோராயமாக 3-6 கிலோ கொண்ட முயல் உணவாகக் கொடுக்கப்படுகிறது. சிறிய வகை பாம்புகளுக்கு எலி அல்லது கோழிக் குஞ்சுகள் உணவாகக் கொடுக்கப்படுகின்றன.இதேவேளை, 16 அடி மலைப்பாம்புடன் உறங்குவதால் ஜீக்கு மிக அதிக அளவு மன அமைதி கிடைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]