150 கிலோ கிராம் கஞ்சா இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தல்

150 கிலோ கிராம் கஞ்சா இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தல். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 150 கிலோ கிராம் கஞ்சா, தமிழக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா கடல் வழியாக கள்ளத் தோணி மூலம் இலங்கைக்குள் கேரளா கஞ்சா கடத்தப்படவிருப்பதாக தமிழக சிறப்பு பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
அதையடுத்து, இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட தீவிர சோதனையின்போது, குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அப்போது, தனுஷ்கோடி அருகே கம்பிபாடு கடற்கரைப் பகுதியில் நடுக்கடலில் பொதிகள் சில மிதந்துவந்ததை அவதானித்த பொலிஸார் அவற்றைக் கைப்பற்றி சோதனையிட்டனர்.

கைப்பற்றப்பட்ட பொதிகளில் சுமார் 150 கிலோ கேரளா கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து கடலில் மிதந்து வந்த நிலையில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா அடங்கிய பொதிகள், தனுஷ்கோடி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த கடத்தலுடன் தொடர்புடைய கடத்தல்காரர்களை தனி படை அமைத்து பொலிஸார் தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் இந்தியப் பெறுமதி 30 இலட்சம் ரூபாயாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.150 கிலோ கிராம் கஞ்சா 150 கிலோ கிராம் கஞ்சா 150 கிலோ கிராம் கஞ்சா

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]