15 வயது பேத்தியின் திருமணத்தை நிறுத்த உயிரை விட்ட தாத்தா – மகனாலேயே தந்தைக்கு நடந்த கொடூரம்!

தனது 15 வயது பேத்தியின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தாத்தாவை சொந்த மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் ஈஸ்வரப்பா. இவரின் மகன் குமார். குமாருக்கு 15 வயதில் மகள் உள்ளார்.

இந்நிலையில் தனது மகளை சுப்ரமணி என்பவரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க குமார் முடிவு செய்தார்.

திருமணம் செலவுகள் அனைத்தையும் ஏற்று கொள்வதாக கூறிய சுப்ரமணி, வரதட்சணை எதுவும் வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

ஆனால் 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது குற்றம் என சிறுமியின் தாத்தாவும், குமாரின் அப்பாவுமான ஈஸ்வரப்பா எதிர்ப்பு கூறியுள்ளார்.

ஆனாலும் குமார் செய்து கேட்கவில்லை. இந்நிலையில் சிறுமிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக மர்ம நபர் ஒருவர் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கூறியுள்ளார்.

இதையடுத்து குமார் வீட்டுக்கு வந்த அதிகாரிகள், சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தனர்.

இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது. இத்திருமணத்தை எதிர்த்த ஈஸ்வரப்பா தான் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார் என நினைத்த குமாரும், சுப்ரமணியனும் அவருடன் சண்டை போட்டுள்ளனர்.

இந்த சண்டையில் பெற்ற தந்தை எனவும் பார்க்காமல் குமாரே ஈஸ்வரப்பா தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

தற்போது குமாரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]