15 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 26 வயது இளைஞர் கைது!!

அரநாயக்க பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமியொருவரை இரண்டு முறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 26 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயது குறித்த சிறுமியின் நெருங்கிய தோழி தனது நண்பன் என கூறி குறித்த இளைஞரின் கைப்பேசி இலக்கத்தை சிறுமிக்கு கொடுத்துள்ளார்.அவருடன் பேச விரும்பமென்றால் பேசுமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் , குறித்த சிறுமி அந்த இளைஞருக்கு கைப்பேசியில் தொடர்பு கொண்டு நட்பாக பழகியுள்ளார்.குறித்த நட்பு சில நாட்களின் பின்னர் காதலாக மாற அந்த இளைஞர் சிறுமியை வசப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகித்து அவரை சந்திக்க வருமாறு அழைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர்களின் முதல் சந்திப்பு மாவனெல்லை நகரில் இடம்பெற்றுள்ளது.பின்னர், அந்த இளைஞர் சிறுமியை விடுதியொன்று அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் , மேலுமொரு நாள் சிறுமியை உஸ்ஸாபிடிய பகுதிக்கு வரச்சொன்ன இளைஞர் முச்சக்கரவண்டியொன்றில் சிறுமியை அழைத்துச்சென்று பாழடைந்த வீட்டில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

சிறுமி மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறியே இவ்வாறு இளைஞருடன் இரண்டு முறை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து சிறுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட சிறுமியின் தாய் அரநாயக்க காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி , இளைஞரின் கைப்பேசி இலக்கத்தை கைப்பற்றிய காவற்துறையினர் , சிறுமியிடம் வாக்குமூலமொன்றை பெற்று சந்தேகநபர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

அரநாயக்க தீவெல , கந்தேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 26 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த அவருக்கு உதவி புரிந்த முச்சக்கரவண்டியின் சாரதி , விடுதியின் முகாமையாளர் மற்றும் பாழடைந்த வீட்டின் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் , இளைஞரின் கைப்பேசி இலக்கத்தை சிறுமிக்கு வழங்கி பெண்ணிடமும் காவற்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ள நிலையில், அவர் தற்போது மாவனெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]