15 மாடுகள் பலி

யாழ்ப்பாணத்தில் இருந்து மொறட்டுவ நோக்கி பயணித்த தனியார் பஸ், வீதியை கடந்த மாடுகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 15 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து மாங்குளத்தை – கொல்லர்புளியங்குளம் பகுதியில் நேற்று இரவு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதியில் நின்ற மாட்டு கூட்டத்தை அவதானிக்காத சாரதி, அதிவேகமாக சென்றதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் பலியான மற்றும் காயமடைந்த மாடுகளின் பெறுமதி 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாகும்.