15 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில்

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் பணி நேற்று ஆரம்பமானது.

இதற்கமைவாக சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக 15 ஆயிரம் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்ட விதிமுறைக்கு அமைவாக நாட்டில் எந்தவொரு இடத்திலும் எத்தகைய தேர்தல் ஊர்வலமும் நடத்தப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஊர்வலம் நடத்தப்படுவது தொடர்பிலான சட்டம் கடுமையாக நடத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்தார்.