15 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு – திருடியவர் கைது

15 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு – திருடியவர் கைது

கைதுதிருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலீம்நகர் பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய சந்தேக நபர் செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திருட்டு சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ள நிலையில் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

58 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது உள் நுழைந்த இந் நபர் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி பணத்தை திருடியுள்ளதாக தெரிய வருகின்றது.

வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விசாரணை செய்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூதூர் பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவரை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]