14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – நடிகை பானுப்ரியா வீட்டில் நடந்தது என்ன?

நடிகை பானுப்ரியா 80களில் கொடிக்கட்டி பறந்தவர். தற்போது இவர் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்  பானுப்ரியா வீட்டில் பணியாற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் தாய் புகார் கொடுத்துள்ளார்.

குறித்த சிறுமியை மாதம் ரூ.10000 சம்பளத்திற்கு பானுப்ரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பினாராம். ஆனால் ஒன்றரை வருடங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லையாம், மேலும் பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

“இதுபற்றி அறிந்ததும் நேரில் சென்று கேட்டேன். அப்போது ‘எங்களிடம் பணம் உள்ளது. உன் மகளை திருட்டு பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம்’ என மிரட்டினார்கள்” என சிறுமியின் தாய் கூறியுள்ளார்.

சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]