14 வயதான தனது மகளையே துஷ்பிரயோகம் செய்த தந்தை- மஸ்கெலியாவில் சம்பவம்

14 வயதான தனது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். மஸ்கெலிய பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது.

துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி 119 அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு, விடயத்தை கூறியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், தந்தையை கைது செய்தனர்.

தந்தையார் பலமுறை சிறுமியுடன் அத்தமீறி நடந்து கொண்டிருக்கிறார். இதை வீட்டிலுள்ளவர்கள் அறிந்திருந்தும், அதை கவனத்தில் கொள்ளவில்லை. இதை பயன்படுத்தி, சிறுமியை அவர் சீரழித்துள்ளார்.

சிறுமி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மஸ்கெலிய பொலிசார் மேலதிக விசாரகைளை நடத்தி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]