14 பாடசாலைகள் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திறக்கப்படும்

சப்ரகமுவ மாகாணத்தில் இயற்கை அனர்த்தம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில் 14 பாடசாலைகளை தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 5ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படும் என, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய கூறினார்.

14 பாடசாலைகள்
ஏலபாத்த பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பலாவெல தமிழ் வித்தியாலயம்,வேரகம சுனந்த வித்தியாலயம்,பலாவெல ஆரம்ப வித்தியாலயம்,அயகம பிரதேச செயலகப்பிரிவிலுள்ள சிங்களகொடை வித்தியாலயம், பிம்புற வித்தியாலயம், விதானகம வித்தியாலயம், தம்மபநந்த வித்தியாலயம், கலதுர வித்தியாலயம், ராகுல வித்தியாலயம், நிவித்திகலை பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கிரிபத்கலை வித்தியாலயம், பாராவத்தை தமிழ் வித்தியாலயம், பேபொட்டுவ வித்தியாலயம்,கலவான செயலகப்பிரிவிலுள்ள கலவான தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே 6ஆம் திகதி திறக்கப்படவுள்ளன எனவும் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட மற்றும் அகதிகளாகவுள்ள 14 பாடசாலைகளும் மறுதினமான 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திறக்கப்படும் எனவும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]